வாடிக்கையாளர்களே மறந்தும் அந்த பக்கம் போகாதீங்க..!! ஆனால் இதற்கு எந்த பிரச்சனையும் இருக்காது..!!
ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்படவுள்ளன. சில மாநிலங்களில், கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜன்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 26ஆம் தேதி வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் விடுமுறை உள்ளதா? தெரிந்து கொள்ளுங்கள்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், அனைத்து மாநிலங்களிலும் வங்கிகள் மூடப்படுகின்றனர். ஆகஸ்ட் 25ஆம் தேதி ஞாயிறு என்பதால் வங்கிகள் வழக்கம்போல, நாடு முழுவதும் மூடப்படும். ஆகஸ்ட் 26ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்குப் பிறகு வருகின்ற ஜன்மாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் காரணமாக சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்படுகிறது.
அதன்படி குஜராத், ஒடிசா, சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், வங்காளம், பீகார், தெலங்கானா, மேகாலயா, இமாச்சல், ராஜஸ்தான், ஜம்மு, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள 3 நாட்களிலும் பெரும்பாலான வங்கிகளால் வழங்கப்படும் இணைய வங்கி, வாட்ஸ் அப் வங்கி, எஸ்எம்எஸ் வங்கி, மொபைல் வங்கி போன்ற டிஜிட்டல் வங்கி சேவைகளைத் தனிநபர்களுக்குத் தடையில்லாமல் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கொட்டிக் கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!