முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வாடிக்கையாளர்களே..!! திடீரென போராட்டத்தில் குதிக்கும் வங்கி ஊழியர்கள்..!! முன்கூட்டியே பிளான் பண்ணிக்கோங்க..!!

10:54 AM Nov 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி, 2024 ஜனவரி 20ஆம் தேதி வரை அனைத்து அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் சுழற்சி முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து வங்கிகளிலும் போதுமான பணியாளர் எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யாமல், 3ஆம் நிறுவனங்கள் மூலமாக தற்காலிக பணியாளர்களை தேர்வு செய்யக் கூடாது. பணியாளர் நியமனம் தொடர்பான விதிகளை மீறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி, அனைத்து தனியார் வங்கிகளும் டிசம்பர் 11ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. போராட்டம் வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது என்றாலும், அனைத்து வங்கிகளுமே ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கும் போராட்டத்தில் முதல் கட்டமாக எஸ்பிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் சிந்து வங்கி போன்றவை பங்கேற்கின்றன. அதேபோல 5, 6, 7, 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வெவ்வேறு வங்கிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

ஜனவரி 2ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய இடங்களில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. பொங்கல் பண்டிகைக் காலத்திலேயே வங்கிகளுக்கு நீண்ட விடுமுறை நாட்கள் வர இருக்கின்றன. அதையொட்டி ஜனவரி 19 மற்றும் 20ஆம் தேதிகளில் நாடு தழுவிய அளவில் அனைத்து வங்கிகளுமே வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

Tags :
தனியார் வங்கிபணியாளர்கள்வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
Advertisement
Next Article