90 நாட்களுக்கு ஊரடங்கா?… பறவைக் காய்ச்சல் எதிரொலியால் எல்லைகளில் நடவடிக்கை!
Bird flu: பறவைக் காய்ச்சல் கிருமிகள் 90 நாள்களுக்குப் பிறகுதான் முழுமையாக அழியும் என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில எல்லைகளில் 90 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் பறவைக் காய்ச்சல் பரவக்கூடும் என்பதால், தமிழ்நாடு – கேரள எல்லையோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு, சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, நீலகிரி வழியாக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்திற்குள் கோழி, வாத்து, முட்டை போன்றவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து உள்ளே வரும் மற்ற வாகனங்களிலும் கிருமிநாசினி தெளித்தப்பின்னரே அனுமதிக்கப்படுகிறது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது, அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைகளில் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அந்தவகையில், கோழி, வாத்து போன்ற பறவை இனங்கள், அவற்றின் எச்சம் மற்றும் கழிவுகளையும் கொண்டு வர அனுமதி இல்லை. பறவைக் காய்ச்சல் கிருமிகள் 90 நாள்களுக்குப் பிறகுதான் முழுமையாக அழியும் என்பதால், இந்தக் கண்காணிப்பு தொடர்ந்து 90 நாள்கள் இருக்கும். அதே சமயத்தில் பாதிப்பு அதிகமாக இருந்தால் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றனர்.
நீலகிரி எல்லையில் கேரளாவிற்கு செல்லும் இந்த 8 சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகளிலும் கால்நடை மருத்துவர், ஆய்வாளர், பராமரிப்பு உதவியாளர் ஆகிய 3 பேர் அடங்கிய குழு 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுட்டு வருகின்றனர். 8 சிறப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: குலுங்கும் மதுரை – கள்ளழகரை காண குவிந்த லட்ச கணக்கான பக்தர்கள்