ஒடிசாவில் பதட்டம்!! 'இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல்' ஊரடங்கு பிறப்பித்த மாவட்ட நிர்வாகம்!!
ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து பாலசோர் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலசோர் நகரின் சில பகுதிகளில் இணையதள சேவையையும் மாவட்ட நிர்வாகம் துண்டித்து இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒடிசாவின் பாலசோர் நகரில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் நகரின் சில முக்கிய பகுதிகளில் இணைய சேவையை நிறுத்தி வைத்துள்ளது மற்றும் மக்கள் தங்கள் வீடுகளில் இருக்கவும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஜூன் 17 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி திங்களன்று பாலசோர் ஆட்சியர் ஆஷிஷ் தாக்கரேவிடம் பேசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது, ”மிருக பலியின் இரத்தத்தை எதிர்த்து, புஜாகியா பிர் பகுதியில் சாலையில் அமர்ந்து ஒரு குழு தர்ணாவில் ஈடுபட்டது. மற்றைய குழுவினர் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து மோதல் வெடித்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
மோதலைத்தொடர்ந்து, நிலமையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவசர மருத்துவ உதவியை தவிர பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டனர். நிலமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
Read more ; உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க.. இல்லாட்டி சிக்கல் தான்!!