முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கடலூர்: தலித் பெண் ஆணவக் கொலையில் பரபரப்பு தீர்ப்பு.! கணவர் உட்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை.!

08:49 PM Feb 19, 2024 IST | 1newsnationuser7
Advertisement

கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் மாவட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சீதா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் கணவர் வீட்டில் திருமணத்திற்கு பிறகு வன்கொடுமை செய்துள்ளனர். அவரை கீழ்தரமாக நடத்தியதோடு வீட்டிலிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் 2014 ஆம் வருடம் சீதாவை கொலை செய்து அவரது உடலை எரித்துள்ளனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், சரவணன் என் தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடலூர் மாவட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது பலரும் வரவேற்றுள்ளனர்.

English Summary: Cuddalore Dalit woman murder case special court gave double life imprisonment to the 4 accused.

Tags :
crimeDalit Woman MurderDouble Life SentenceSocial DiscriminationTamilnadu
Advertisement
Next Article