கொடூரம்!. பாலஸ்தீன கைதியை பலாத்காரம் செய்யும் இஸ்ரேலிய வீரர்கள்!. வெளியான வீடியோவால் அதிர்ச்சி!
Rape: பாலஸ்தீனிய பெண் கைதி ஒருவரை இஸ்ரேலிய வீரர்கள் சிறைச்சாலையிலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சிசிடிவி கேமரா காட்சிகளை இஸ்ரேலிய ஊடகம் வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில், தான் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்த தொடங்கியது.
முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்த்ந ஹமாஸ் அமைப்பினர் 250-க்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தி காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசா நகரம் நிலைகுலைந்துள்ளது. 11 மாதங்களாக நடைபெற்று வரும் இந்த தாக்குதல்களில் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்தநிலையில், ஜூலை மாத இறுதியில், Sde Teiman தடுப்பு மையத்தில் பாலஸ்தீனியர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காக்க 9 இஸ்ரேலிய வீரர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், செவ்வாயன்று அந்நாட்டு ஊடகங்களில் ஒரு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில், பாலஸ்தீனியர்களில் ஒருவரைத் தடுப்பு மையத் தளத்தில், கண்களை மூடிக்கொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பின்னர் அவர்கள் அந்த பெண்ணை ஒருபுறம் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். இதனால், குடல் வெடிப்பு, ஆசனவாயில் கடுமையான காயம், நுரையீரல் பாதிப்பு மற்றும் உடைந்த விலா எலும்புகள்" ஆகியவற்றால் பாதிக்கப்பட் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கொடூரமான மனிதாபிமானமற்ற நிலைமைகளுக்கு மத்தியில், குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் இதன் விளைவாக 10 மாதங்களில் இறந்துவிட்டனர்." ஆண்கள் மற்றும் பெண்களின் அறிக்கைகள், கைதிகள் "கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர், படுக்கையில் கட்டப்பட்டுள்ளனர், கண்களை மூடிக்கொண்டு நாப்கின் அணிந்துள்ளனர், ஆடைகளை அணியவில்லை, போதுமான சுகாதாரம், உணவு, தண்ணீர் மற்றும் தூக்கம் இல்லாமல்" மற்றும் "பாலுறுப்பு உட்பட மின்சாரம் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்று இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான B'Tselem தயாரித்த அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.