மைக்ரோசாப்ட் செயலிழப்பு : பின்னணியை விளக்கும் CrowdStrike CEO..!!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகள் உலகளாவிய செயலிழப்பை சந்தித்து வருவதாக மைக்ரோசாப்ட் உறுதிப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் இயங்குதளம், செயலி உள்ளிட்ட அனைத்தும் பாதிக்கப்பட்டது. மென்பொருள் செயலிழந்ததால் சர்வதேச அளவில் வங்கி, விமான சேவைகள், பங்குச்சந்தை, மருத்துவ மனை உள்ளிட்ட முக்கியமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு வலைப்பதிவு இடுகையில், CrowdStrike CEO ஜார்ஜ் கர்ட்ஸ், உலகளாவிய செயலிழப்பிற்கு என்ன காரணமாக இருக்கலாம் என்பதை விளக்கியுள்ளார். இந்தச் சிக்கலைச் சரிசெய்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு எப்படி வழிகாட்டுவது என்ற வழிகாட்டுதலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், பிழை சரி செய்யப்பட்டு, உலகம் முழுவதும் அமைப்புகள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன, பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் விண்டோஸ் பதிப்பு 7.11 மற்றும் அதற்கு மேல் ஃபால்கன் சென்சார் இயங்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் ஜூலை 19 அன்று குறிப்பிட்ட இடைவெளியில் ஆன்லைனில் இருந்தவர்கள் ஆவர். சென்சார் உள்ளமைவு புதுப்பிப்புகள் பாதுகாப்பு வழிமுறைகளின் ஒரு பகுதியாகும். இதில் ஏற்பட்ட பிழையின் விளைவாக சிஸ்டம் செயலிழந்து, பாதிக்கப்பட்ட கணினிகளில் நீலத் திரை ஏற்பட்டது" என்று அவர் கூறியிருந்தார்.