கூட்டம் கூட்டமாக!. காட்டை விட்டு வெளியே வரும் அமேசான் பழங்குடியினர்!. வன்முறை அபாயம்!
Amazonian tribe: உலகின் மிகப்பெரிய தொடர்பற்ற அமேசானிய பழங்குடியினர், காடுகளை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் வன்முறை அபாயம் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சர்வைவல் இன்டர்நேஷனல் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பெரு பகுதியில் இருக்கும் அமேசான் காட்டில் மாஷ்கோ பிரோ என்ற பழங்குடியின மக்கள் கூட்டமாக ஆற்றங்கரையில் சுற்றித் திரியும் காட்சி இடம்பெற்றுள்ளது. மாஷ்கோ பிரோ பழங்குடியின மக்கள் காட்டில் கிடைக்கும் விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவதோடு, கிழங்குகள் உள்ளிட்டவற்றையும் உணவாக கொள்கின்றனர். ஆனால், அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால், ஆமை இறைச்சியும், அதன் முட்டைகளும்தான். எனவே, மாஷ்கோ பிரோ பழங்குடியின மக்கள் ஆமை முட்டைகளைத் தேடி அடிக்கடி ஆற்றங்கரை பகுதிக்கு வருவது உண்டு. ஆனால், இந்த அளவுக்கு கூட்டத்தை இப்போதுதான் பார்ப்பதாக, பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக போராடி வரும் என்.ஜி.ஓ.க்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக அமேசான் காடுகளில் மரங்களை வெட்ட உரிமை பெற்றிருக்கும் நிறுவனங்களின் பணியாளர்கள், அங்கு டிரக்குகளில் செல்லும்போது மாஷ்கோ பிரோ பழங்குடியின மக்களை பார்ப்பதுண்டாம். ஆனால், அவர்கள் வாகனங்களை பார்த்து பயந்து காட்டுக்குள் ஓடிவிடுவார்களாம். எனவே, தற்போது ஆற்றங்கரையில் கூட்டமாக இருக்கும் காட்சி உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக மரம் வெட்டும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மரம் வெட்டுபவர்கள் இருப்பதால் பழங்குடியினருக்கும் மரம் வெட்டுபவர்களுக்கும் இடையே வன்முறை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: காலநிலை மாற்றம்!. மோசமான பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம்!. எச்சரிக்கும் நிபுணர்கள்!.