பரந்தூர் நோக்கி படையெடுக்கும் கூட்டம்..!! தடுத்து நிறுத்தும் போலீஸ்..!! தவெக தலைவர் விஜய் வருகையால் பெரும் பரபரப்பு..!!
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு 12 மணி முதல் 1 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது.
பரந்தூர் கிராம மக்களை சந்திப்பதற்காக தவெக தலைவர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று காலை காரில் புறப்பட்டார். இந்நிலையில், பரந்தூர் நோக்கி வரும் தவெக தொண்டர்கள், வெளிநபர்களை காவல்துறையினர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. 13 கிராம மக்கள்தான் என்பதை உறுதிப்படுத்த அவர்களின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை காவல்துறை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடையாள ஆவணங்களை சரிபார்த்த பின் மண்டபத்திற்குள் காவல்துறை அனுமதி அளிப்பதாக கூறப்படுகிறது.