For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Crime | ரவுடி மனைவியுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா..? இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..!!

10:55 AM May 21, 2024 IST | Chella
crime   ரவுடி மனைவியுடன் உல்லாசம்     எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா    இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்
Advertisement

Crime | சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் தினேஷ் (26). இவர், வாட்டர் வாஷ் கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர், மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி இரவு புரசைவாக்கம் சண்முகராயன் தெருவில் தினேசும் அவரின் நண்பருமான ரவுடி கார்த்திக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல், தினேஷை சுத்துப்போட்டு சரமாரியாக வெட்டினர்.

Advertisement

இதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இமான்(எ) இமானுவேல் (25) கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தீவிர விசாரணையில், இமானுவேல் மனைவியுடன் தினேஷ் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தை அறிந்த இமானுவேல் மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு தினேஷை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இமானுவேல் தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்து தினேஷை கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Read More : வங்கக் கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..!!

Advertisement