மைதானத்தில் சுருண்டு விழுந்த கிரிக்கெட் வீரர்!. மாரடைப்பால் துடிதுடித்து உயிரிழந்த சோகம்!. அதிர்ச்சி காட்சிகள்!
Heart attack: மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வீரர், திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று நோய்க்கு பிறகு இந்தியாவில் மாரடைப்பு இறப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் விளையாட்டு வீரர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில், மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த வீரர், சுருந்து விழுந்து உயிரைவிட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஜல்னாவில் உள்ள ஃப்ரேசர் பாய்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. அப்போது, விளையாடிக்கொண்டிருந்த வீரர் ஒருவர், சகவீரருடன் பேசிவிட்டு நடந்து சென்றபோது திடீரென சுருண்டு விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த வீரர், விஜய் படேல்(32) என்பது அடையாளம் காணப்பட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Readmore: ஷாக்!. பெண்களை பணியில் அமர்த்தும் அனைத்து நிறுவனங்களும் மூடப்படும்!. ஆப்கனில் தலிபான் அரசு அதிரடி!