For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோவையில் கிரிக்கெட் மைதானம்..! கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுகவின் வாக்குறுதிகள் வெளியீடு..!

03:44 PM Apr 16, 2024 IST | Kathir
கோவையில் கிரிக்கெட் மைதானம்    கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுகவின் வாக்குறுதிகள் வெளியீடு
Advertisement

18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

Advertisement

தமிழகத்தில் அதிக கவனத்தை ஈர்த்த மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று கோவை. கோவை மக்களவை தொகுதியில் இதுவரை, கம்யூனிஸ்ட் கட்சி 7 முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும், திமுக, பாஜக கட்சிகள் தலா இரு முறையும், அதிமுக ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

பத்து ஆண்டுகளுக்குப் பின் கோவையில் திமுக நேரடியாக களமிறங்கி உள்ளது திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டி. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் படித்த இளைஞரான சிங்கை ராமச்சந்திரன் களம் காண்கிறார். இந்நிலையில் கோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. திமுக தேர்தல் பணிமனையில் இருந்து அமைச்சகர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டார்.

கோவை மக்களவை தொகுதிக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், "கோவையில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நீர் மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் ஏரிகளில் கழிவு நீறு கலப்பதும் தடுக்கப்படும். பன்னோக்கு சர்வேதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும். விமான நிலைய விரிவாக பணிகள் விரைந்து முடிக்கப்படுவதுடன், நிலா உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்.

கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். சிறுவாணி மற்றும் பில்லூர் ஆறுகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். சிறு குறு தொழில் சட்டம் 2006ல் உள்ள பிரிவு 43 பிஎச் நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பதற்கண் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜவுளித்துறையில் உள்ள சிறு குறு தொழில் (MSME) நிறுவனங்களை நவீன மயமாக்கல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு அரசு மானியங்கள் மூலாம் ஊக்குவிக்கப்படும். பம்ப்செட் மற்றும் உதிர்ப்பான் தொழிற்சாலைகளுக்கும் உள்ள ஜிஎஸ்டி பிர்ச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement