முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்; எவ்வளவு காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள்?. உச்சநீதிமன்றம் கேள்வி!

08:57 AM Dec 10, 2024 IST | Kokila
Advertisement

Supreme court: இன்னும் எத்தனை காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுங்கள் என்று கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement

கடந்த 2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றுநோய் பரவலின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வு குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மத்திய அரசால் வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களை பெற அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை வழங்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், இது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் "இ-ஷ்ரம்" போர்ட்டலில் பதிவு செய்ததாகவும் ரேஷன் பொருட்களை வழங்க அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவேண்டும் என்றும் கூறினார்.

இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு கூறிய தகவல் வியப்பை ஏற்படுத்துகிறது. 81 கோடி பேருக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுகிறது என்றால், இதில் முறையாக வரி செலுத்தப்படும் குடிமக்கள் மட்டுமே விடுபட்டுள்ளனர். இன்னும் எத்தனை காலத்திற்கு இலவச வசதிகளை வழங்குவீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொடுங்கள் என்று கூறினர்.

மேலும் வழக்கறிஞர் கூறியதுபோல், வழிகாட்டுதல்களை வெளியிட்டால், மக்களை திருப்திபடுத்தும் நோக்கில் அனைத்து மாநில அரசுகளும் உடனடியாக அதை பின்பற்றும் என்றும் ஏனென்றால் இந்த திட்டத்திற்கான செலவை மத்திய அரசு ஏற்கும் என்று அவர்கள் உணர்வர் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை பிரித்து பார்க்கவில்லை என்றும் அது மிகவும் கடினமானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கில் விரிவான விசாரணை நடத்தவேண்டியுள்ளது என்று கூறி அடுத்த விசாரணை வரும் ஜன. 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Readmore: பொது சுகாதார நெருக்கடியை நோக்கி உலக நாடுகள்!. 2050ல் முடிவுக்கு வரும் ஆயுட்காலம்! ஆய்வில் அதிர்ச்சி!

Tags :
central govtcreate employmentquestionsupreme court
Advertisement
Next Article