முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"கோழைத்தனமான தாக்குதல் மிகவும் வெட்கக்கேடானது" தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்..!

07:02 AM May 05, 2024 IST | Kathir
Advertisement

விமானப்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று இந்திய பாதுகாப்புப் படையின் இரு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய விமானப்படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் அவர்கள் உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீரர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற மூன்று வீரர்கள் நிலையாக இருப்பதாகவும். அவர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது, பாதுகாப்பு படையின் வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருப்பது, நாடெங்கும் பெரும் அதிர்வலையை எழுப்பியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரின் பதிவில், " ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​நகரில் நமது ராணுவ வாகனத்தின் மீது கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் வருத்தமளிக்கிறது. வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
rahul gandhi about terrorist attackராகுல் காந்தி கடும் கண்டனம்
Advertisement
Next Article