கோவிட்-19: வேகமெடுக்கும் கொரோனா.., 743 ஆக உயர்ந்த புதிய பாதிப்பு.! 24 மணி நேரத்தில் 7 மரணங்கள்.!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 743 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு இருக்கிறது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் 3 பேரும் கர்நாடகாவில் 2 பேரும் கொரோனா தொற்றில் பலியாகி இருக்கின்றனர். மேலும் தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் தலா 1 நபர் உயிரிழந்திருக்கிறார். நேற்றைய பாதிப்புகளையும் சேர்த்து இதுவரை இந்தியாவில் 4091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தியா முழுவதும் 162 பேர் புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 தொற்றிற்கு ஆளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதில் கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் அதிகமான நபர்கள் புதிய வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.