முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோவிட்-19: 24 மணி நேரத்தில் 5 பேர் பலி.! மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

06:49 PM Jan 07, 2024 IST | 1newsnationuser7
Advertisement

கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு தற்போது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்தி வந்தது. இந்தத் தொற்றால் பல கோடி கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தத் தொற்று நோய்க்கான தடுப்பூசி கண்டுபிடித்த பிறகு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது .

Advertisement

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இந்த கொரோனாவின் புதிய வகையான ஜேஎன்.1 உலகெங்கும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 756 பேருக்கு புதிய தொற்று ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4049 ஆக அதிகரித்திருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 5 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா 2 நபர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஒருவரும் என மொத்தம் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. பொதுமக்கள் கொரோனா தற்காப்புகளை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி இருக்கிறது.

Tags :
covid-19Death ReportindiaJN.1 VariantMinistry of Health
Advertisement
Next Article