For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரத்தம் உறைதல், இதயம் பிரச்சனைகள் உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது..! சீரம் இந்தியா நிறுவனம் சொல்வதென்ன..!

09:53 AM May 03, 2024 IST | Kathir
ரத்தம் உறைதல்  இதயம் பிரச்சனைகள் உள்ளிட்டவை கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது    சீரம் இந்தியா நிறுவனம் சொல்வதென்ன
Advertisement

மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை மனதில் வைத்தே கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இந்த தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் ஏற்படாது என்று பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement

கொரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவியபோது, கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கோவிஷீல்டு தடுப்பூசியை பிரிட்டிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா கண்டுபிடித்த நிலையில், ‘சீரம் இந்தியா’ நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது.

இந்த நிலையில், தான், கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான பிரிட்டனில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் சமர்ப்பித்த ஆவணத்தில், கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் (பிளேட்லட்) அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பலருக்கும் தங்களுக்குத் தடுப்பூசியைப் போட்டதால் தங்களுக்கு எதாவது ஆபத்து ஏற்படுமா என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது.

இந்த சூழலில்தான் பாரத் பயோடெக் நிறுவனம் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘கோவாக்சின் தடுப்பூசியால் எந்த பக்க விளைவும் இல்லை. ரத்தம் உறைதல் உள்ளிட்ட எந்த பக்க விளைவுகளும் இந்த தடுப்பூசியால் ஏற்படாது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மதிப்பீடு செய்யப்படது. கோவாக்சின் தடுப்பூசியின் தன்மை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். 27,000 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட முடிவில் கோவாக்சின் தடுப்பூசி அனைவருக்கும் வழங்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “பொதுவாக எந்தவொரு தடுப்பூசியை எடுத்துக் கொண்டாலும் அதன் பக்க விளைவுகள் என்பது வேக்சின் போட்டு சில வாரங்களில், அதாவது 1-6 வாரங்களில் நடப்பதாகவே இருக்கும். எனவே, இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பூசி எடுத்தவர்கள் கவலைப்படத் தேவையில்லை” என்றார். தேசிய இந்திய மருத்துவ சங்கத்தின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவனும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் தெரிவித்துள்ளார்.

Advertisement