Senthil Balaji | செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50-வது முறையாக நீட்டிப்பு..!!
49 முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் நீதிமன்ற காவல் நீடிக்கப்படுவதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். இவர், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து துறையில் பணி வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்ற நிலையில், கடந்தாண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்வும், ஜாமீன் கோரியும் நீதிமன்றங்களை நாடியும் எந்த பலனும் இல்லை. தற்போது அவரது நீதிமன்ற காவல் 49-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக இருந்து வருகிறார்.
முன்னதாக நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 29ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.நாளை வரை காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 50வது முறையாக நீட்டிக்கபடுவது குறிப்பிடத்தக்கது.
Read more ; 2025 IPL-ல் எம்எஸ் தோனி விளையாட வாய்ப்பு..!!