For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூஜை செய்ய அனுமதித்த நீதிமன்றம்!… ஞானவாபி வளாகத்தில் பிரார்த்தனை செய்த முதல்வர்..!

09:56 AM Feb 14, 2024 IST | 1newsnationuser3
பூஜை செய்ய அனுமதித்த நீதிமன்றம் … ஞானவாபி வளாகத்தில் பிரார்த்தனை செய்த முதல்வர்
Advertisement

வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாக நிலவறையில் இடம்பெற்றிருக்கும் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் அதிகாலை பிரார்த்தனை செய்து வழிபட்டார்.

Advertisement

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதா் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், ஹிந்து கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து ஆய்வு நடத்த ஹிந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது. தொல்லியில் துறையின் ஆய்வறிக்கையின்படி, ‘மசூதி அமைந்துள்ள இடத்தில் முன்பு ஹிந்து கோயில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’ என்று ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை முஸ்லிம்கள் தரப்பு மறுத்தது.

இதனிடையே, ‘மசூதி நிா்வாகத்தால் அங்குள்ள நிலவறை கடந்த 1993-ஆம் ஆண்டு மூடப்படும் வரை, பூஜைகளை செய்துவந்த பூசாரி சோம்நாத் வியாஸின் குடும்பத்தினருக்கு மீண்டும் பூஜைகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வலியுறுத்தி சோம்நாத் வியாஸின் பேரனான சைலேந்திர குமாா் பதக் என்பவா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற மாவட்ட நீதிபதி, நிலவறையில் பூஜை நடத்த கடந்த ஜனவரி 31ம் தேதி அனுமதி அளித்தாா்.

இந்த நிலையில், நேற்று வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி வளாகத்திற்குச் சென்று அங்குள்ள 'வியாஸ் கா தெகானா'வை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபட்டார். தொடர்ந்து வியாஸ் தெஹ்கானா'வில் நிறுவப்பட்ட சிற்பங்களையும் நந்தியையும் அவர் வணங்கினார். இதையடுத்து, மாலையில் முதல்வர் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதிக்கு வரும் 24,25 தேதிகளில் வருகை தருவதையொட்டி, முதல்வர் யோகி ஆதித்யநாத் வாரணாசி சென்றார். ​சிக்ரா ஸ்டேடியம் என்றும் அழைக்கப்படும் டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கம் மற்றும் காசி ரோப்வே ஆகியவற்றை ஆய்வு செய்தார். 30 ஏக்கர் நிலப்பரப்பில் 475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அமுல் ஆலையையும் முதல்வர் பார்வையிட்டார்.

Tags :
Advertisement