ஒரு தடவை இந்த மாதிரி சமைச்சு சாப்பிட்டு பாருங்க.!கிராமத்து ஸ்டைலில் சூப்பரான ஆவாரம் பூ சாம்பார் ரெசிபி.!
எப்போதும் ஒரே விதமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அலுப்பு தட்டிவிடும். இதனால் ஏதாவது வித்தியாசமாக சமைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் தோன்றும். இதேபோல சுவையும் மணமும் நிறைந்த ஆவாரம் பூ சாம்பார் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த சாம்பார் செய்வதற்கு ஒரு கப் துவரம் பருப்பு, நான்கு சின்ன வெங்காயம், ஒரு தக்காளி ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் சிறிதளவு ஆவாரம் பூவை எடுத்து நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். முதலில் குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு, வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக வேக வைக்கவும்.
இவை நன்றாக வெந்து வந்ததும் இவற்றுடன் ஆவாரம் பூவை சேர்த்து பருப்பு கடையும் மத்தால் நன்றாக கடைந்து விடவும். இப்போது ஒரு கடாயில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்றாக தாளித்த பின் அவற்றை எடுத்து குக்கரில் இருக்கும் பருப்போடு சேர்த்து நன்றாக கிளறி விட்டால் சுவையான ஆவாரம் பூ சாம்பார் ரெடி வாங்க சாப்பிடலாம்.