கள்ளச்சாராயம், மாஞ்சோலை விவகாரம்..!! சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதுமே மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விவகாரம் ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என சபாநாயகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனின்ஸ்ட், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்கிடையே, மானியக் கோரிக்கை தொடர்பான சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில், அவை நடவடிக்கையை புறக்கணிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட நபர்களின், குடும்பத்தினரை நேரில் சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Read More : ’மீண்டும் இப்படி ஒரு சம்பவமா’..? தமிழ்நாடு அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்..!!