முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கள்ளச்சாராய மரணம்..!! மீண்டும் மறுப்பு..!! அதிமுக அட்ராசிட்டி..!! கடுப்பான சபாநாயகர்..!! அதிரடியாக வெளியேற்றம்..!!

All the AIADMK MLAs who were protesting in the assembly demanding a discussion on the death of Kallakurichi Kallacharaya were escorted out by the security guards following the order of Speaker Appa.
10:20 AM Jun 25, 2024 IST | Chella
Advertisement

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க கோரி சட்டசபையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகர் அப்பாவு உத்தரவை தொடர்ந்து அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மக்களவைத் தேர்தல் காரணமாக பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக கடந்த 20ஆம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று காலை 9.30 மணிக்கு 5-வது நாளாக தொடங்கியது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். அதனை கடுமையாக கண்டித்த சபாநாயகர் அப்பாவு, அனைத்து அதிமுக எம்எல்ஏக்களையும் வெளியேற்ற சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Read More : மக்களே..!! இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! கஷ்டம் மேல கஷ்டம் வரும்..!! கவனமா இருங்க..!!

Tags :
kallakurichiஅதிமுகஎடப்பாடி பழனிசாமிகள்ளச்சாராயம்தமிழ்நாடு சட்டப்பேரவை
Advertisement
Next Article