முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

LLB படிப்புக்கான கலந்தாய்வு... மின்னஞ்சல் வாயிலாக 23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்....!

Counseling for LLB course can be submitted through email till 5.45 pm on 23rd
08:25 AM Oct 21, 2024 IST | Vignesh
Advertisement

ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் முகவராக இருந்து தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ள 23 சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 5 ஆண்டு பி.ஏ.எல்.எல்.பி சட்டப் படிப்பிற்கான (முறைசார்) மாணவர்கள் சேர்க்கையினை ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர சேர்க்கை முறையில் நடத்தி வருகிறது.

Advertisement

மேலும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.LL.B.(Hons.), B.B.A.LL.B.(Hons.), B.Com.LL.B. (Hons.) , B.C.A.LL.B. (Hons.) சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் 3 ஆண்டு எல்எல்பி படிப்புக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் வாயிலாக அக்.23-ம் தேதி மாலை 5.45 மணி வரை சமர்ப்பிக்கலாம். ஆன்லைன் சரிபார்ப்பு அக்.23 வரை நடைபெறும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை 26-ம் தேதி இணையவழியில் வழங்கப்படும். சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் அக்.28 முதல் 30-ம் தேதிக்குள் சேர்ந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Next Article