பெற்றோர்களே உஷார்.! பஞ்சு மிட்டாயில் இருக்கும் ஆபத்து.! தமிழக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை.!
தற்காலத்தில் மக்கள் உட்கொள்ளும் உணவுகளில் ஏராளமான ரசாயனங்கள் கலப்பதால் பல்வேறு விதமான நோய்களும் உடல் உபாதைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் மற்றும் மிட்டாய்களில் குழந்தைகளை கவர்வதற்காக வண்ணப் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகளில் கலக்கப்படும் வேதி பொருட்கள் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில் திருவிழாக்கள் கடற்கரைகள் மற்றும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்யப்படும் பஞ்சுமிட்டாய்களை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதாக தமிழக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு இது போன்ற பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டாம் என பெற்றோர்களை அறிவுறுத்தி இருக்கிறது. சென்னையில் உள்ள மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்புத் துறையில் சோதனை செய்தது.
இந்த சோதனையில் மிட்டாய்களின் தயாரிப்பின் போது நிறத்திற்காக ரோடமைன் பி என்ற கெமிக்கல் பயன்படுத்தப்படுவது தெரிய வந்திருக்கிறது. இது புற்றுநோயை உருவாக்கக்கூடிய முக்கிய மூலக்கூறாக இருப்பதால் பச்சை ஊதா நிற பஞ்சுமிட்டாய்களை குழந்தைகளுக்கு வாங்கி தர வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.