For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Corbevax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்!

07:45 AM Jan 17, 2024 IST | 1newsnationuser3
corbevax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல்
Advertisement

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியான Corbevax தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளின் பட்டியலில் உலக சுகாதார அமைப்பு சேர்த்துள்ளது.

Advertisement

உலக அளவில் பெரும் பொருளாதார இழப்பையும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழ்நிலையும் உருவாக்கியது கொரோனா வைரஸ். 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கியது. அடுத்தடுத்து உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கடந்த 2023 டிசம்பரில் மீண்டும் ஆட்டத்தை துவங்கி ஆங்காங்கே பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், Corbevax தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

இந்தியா மருந்து நிறுவனமான Biological E Limited மூலம் Corbevax தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிர்வாக இயக்குனர் மஹிமா தட்லா கூறியதாவது, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் சேர்க்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது பொது சுகாதாரத்தை பாதிக்கத் தொடங்கும் போது கொரோனா தடுப்பூசிகளைத் தொடர்ந்து உருவாக்க தளத்தைப் பயன்படுத்த உதவும். WHO இன் இந்த ஒப்புதல் கோவிட்-19 க்கு எதிரான எங்கள் உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று கூறினார்.

டிசம்பரில் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை வரிசையாக பெரியவர்கள், குழந்தைகளிடையே வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, 100 மில்லியன் டோஸ் கோர்பேவாக்ஸை மத்திய அரசுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனம் வழங்கியது, பின்னர் அவை பான்-இந்திய நோய்த்தடுப்பு பிரச்சாரங்களில் பயன்படுத்தப்பட்டன என்றும் மஹிமா தட்லா குறிப்பிட்டார். இருப்பினும், உலகளவில் உயர்தர மற்றும் மலிவு விலையில் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கும் அணுகுவதற்கும் BE தொடர்ந்து உறுதியுடன் உள்ளதாகவும் தட்லா தெரிவித்தார்.

Tags :
Advertisement