For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கொரோனா பரவல் எதிரொலி..!! தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வந்தது..!!

As a precautionary measure against Corona, passengers arriving from Sharjah and Singapore are being screened at the Coimbatore airport.
11:04 AM May 23, 2024 IST | Chella
கொரோனா பரவல் எதிரொலி     தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வந்தது
Advertisement

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

கடந்த சில தினங்களாக சிங்கப்பூரில் கே.பி.2 என்ற புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது இந்தியாவிலும் ஒரு சில பகுதிகளில் பதிவாகியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை விமான நிலையத்தில் ஷார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு நாள்தோறும் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், கோவை - சிங்கப்பூர் இடையே வாரத்திற்கு 5 நாட்களுக்கு விமானம் இயக்கப்படுகிறது.

விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் மூலம் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது பரவக்கூடிய புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Read More : உங்கள் பான் கார்டில் ஏதேனும் தவறு இருக்கா..? இனி ஈசியாக மாற்றலாம்..!! எப்படி தெரியுமா..?

Advertisement