For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா..? மீண்டும் நெருங்கி வரும் ஆபத்து..!! பத்திரமா இருங்க..!!

10:52 AM Dec 23, 2023 IST | 1newsnationuser6
ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா    மீண்டும் நெருங்கி வரும் ஆபத்து     பத்திரமா இருங்க
Advertisement

சீனாவில் 2019ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உலகையே ஆட்டிப்படைத்தது. அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து, அச்சம் காட்டி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை டிசம்பர், ஜனவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர்காலம், கொரோனா சீசனாகவே மாறிவிட்டது.

Advertisement

அந்த வகையில் நடப்பாண்டும் நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்க தொடங்கி உள்ளது. கொரோனாவின் மற்றொரு திரிபான ஒமைக்ரான் வைரஸ் ஜேஎன்-1 வகை வைரஸ் தொற்றானது தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய திரிபானது வயதானவர்களுக்கும், வேறு நோய் தொற்றுகள் உள்ளவர்களுக்கும் சிக்கலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் புதிதாக 640 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது. இதில் 80 சதவீத பாதிப்பு கேரளாவில் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் ஒரே நாளில் 265 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,606 ஆக அதிகரித்துள்ளது. திருவனந்தபுரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையே கேரளா உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளன. அந்த வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement