For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிலவையே ஆட்டிப்படைத்த கொரோனா ஊரடங்கு..!! அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா..? விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்..!!

Due to the global lockdown, the surface temperature of the moon has decreased significantly, Indian researchers have published an unexpected research result.
10:34 AM Oct 07, 2024 IST | Chella
நிலவையே ஆட்டிப்படைத்த கொரோனா ஊரடங்கு     அப்படி என்ன நடந்துச்சு தெரியுமா    விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல்
Advertisement

சீனாவின் உகான் பகுதியில் 2020 தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது. இந்த பெருந்தொற்று பரவலால், திணறி போன நாடுகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தன. கொரோனா காலத்தில் பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த தொற்று கட்டுப்படுத்த பின்னர் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் நாடுகள் ஈடுபட்டன.

Advertisement

இதனால், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு நாடுகள் திரும்பின. கொரோனாவால், பூமி முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது மட்டுமின்றி, அது நிலவிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய ஊரடங்கால், நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து போயிருந்தது என எதிர்பாராத ஆய்வு முடிவு ஒன்றை இந்திய ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கின்போது, பூமியில் மனிதர்களின் செயல்பாடுகள் குறைந்தன. ஊரடங்கால் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் மற்றும் தூசிகள் அதிக அளவில் குறைந்து, பூமியின் கதிரியக்க வெளியேற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த ஊரடங்கால், நிலவின் வெப்பநிலை குறைந்து போயிருப்பது தெரியவந்துள்ளது. நாசாவின் எல்.ஆர்.ஓ. எனப்படும் விண்கலம் பல ஆண்டுகளாக நிலவை சுற்றி வருகிறது. நிலவின் மேல்புறம் மற்றும் சுற்றுச்சூழலை பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

இந்நிலையில், அதனிடம் இருந்து கிடைத்த தகவல்களை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வாளர்கள் துர்கா பிரசாத் மற்றும் ஆம்பிளி ஆகியோர் 2017 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் நிலவின் 6 வெவ்வேறு பகுதிகளில் வெப்பநிலை பற்றிய ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வின்படி, நிலவில் அதிக குளிரான வெப்பநிலை நிலவியது, 2020இல் பதிவாகி உள்ளது. இதில், நிலவில் இரவில் மேற்புறம் 8 முதல் 10 கெல்வின் வரை வெப்பநிலை குறைந்து போயிருந்தது.

அதற்கடுத்த ஆண்டுகளில் மனித செயல்பாடுகள் அதிகரித்து வெப்பமும் அதிகரித்தது உணரப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, மனித நடவடிக்கைகளின் செயல்பாட்டு குறைவால் அருகேயுள்ள மற்ற கோள்கள் மற்றும் விண்ணுலகில் உள்ள பிற பகுதிகளில் ஏற்படும் விளைவுகளை கவனிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி தந்துள்ளது என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். பூமியின் பருவநிலை மாற்றம், நிலவின் சுற்றுச்சூழலை எப்படி பாதிக்கும்? என்பது பற்றி ஆழ்ந்த ஆய்வை மேற்கொள்ள, வருங்காலத்தில் நிலவின் ஆய்வகங்கள் அதற்கான வசதிகளை வழங்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More : கள்ளக்காதலியை அரசு அதிகாரியாக நியமித்த போலீஸ் ஏட்டு..!! தொழிலதிபர்களை ஏமாற்றி ரூ.15 கோடி அபேஸ்..!! திடுக்கிடும் தகவல்கள்..!!

Tags :
Advertisement