புதிய வகை கொரோனா பரவல் எதிரொலி.! நோய் தொற்றின் பாதிப்புகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.!
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந் தொற்று உலகையே முடக்கியது. இந்தத் தொற்று நோயால் உலகில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்தப் பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து தற்போது தான் உலகம் மீண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு 230 பேருக்கு பரவிய இந்த கொரோனா தற்போது 1100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.
இதனால் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகும் என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் குறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டியளித்து இருக்கிறார். புதிய கொரோனா பரவல் தொடர்பாக பேசியிருக்கும் அவர்" தமிழகத்தில் இதுவரை 254 பேருக்கு பரிசோதனை செய்ததில் நாலு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார் .
மேலும் காய்ச்சல் அதிகமாக இருக்கும் பகுதிகளில் பரிசோதனைகளை அதிகப்படுத்த முதலமைச்சர்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கொரோனா பாதிப்பு நான்கு நாட்களுக்கு இருக்கும் என தெரிவித்த அவர் அதன் பிறகு சரி ஆகிவிடும். இதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.