For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

செம்பு vs மண் பானை தண்ணீர்..!! எது நிறைய நன்மைகளை தரும்..? கோடை வெயிலுக்கு சிறந்தது எது..?

08:19 AM May 06, 2024 IST | Chella
செம்பு vs மண் பானை தண்ணீர்     எது நிறைய நன்மைகளை தரும்    கோடை வெயிலுக்கு சிறந்தது எது
Advertisement

வெயில் காலத்தில் செம்பு பாத்திரம் - மண் பானை இதில், இரண்டில் எதில் தண்ணீர் வைத்துக் குடிப்பது நிறைய நன்மைகளைத் தரும் என்று தான் இந்தப் பதிவில் பார்க்க உள்ளோம்.

Advertisement

செம்பு

அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி அறிக்கையின் படி, செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும் போது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறைவது தெரியவந்துள்ளது. குறிப்பாக உடலுக்குத் தீங்கு செய்யக்கூடிய டிரை கிளிசரைடுகளை குறைத்து இதய நோய் ஆபத்துக்களைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் ஆபத்தை தடுக்கும். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும்போது உடலின் செயல்திறன் மேம்படும். நாம் உண்ணும் உணவுகளில் உள்ள இரும்புச்சத்தை உடல் முழுமையாக உறிஞ்சிக் கொள்ள உதவும்.

உணவை உடைத்து அதில் உள்ள இரும்புச்சத்து முழுமையாகக் கிடைக்கச் செய்வதால் ஹீமோகுளோபின் ரத்தத்தில் அதிகரிக்கும். இதனால், அனீமியா என்னும் ரத்த சோகை பிரச்சனை வராது. மேலும், இதய ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ளும். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிக்கும்போது போதிய காப்பர் சத்து கிடைப்பதால், ஜீரண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். காப்பர் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிக்கும் போது அது உடலில் கொழுப்புகள் தேங்காமல் உடைத்து கழிவுகளாக வெளியேற்றி டீடாக்ஸ் செய்ய உதவி செய்யும்.

குறிப்பாக டிரை கிளிசரைடுகளும் கெட்ட கொலஸ்டிராலான எல்டிஎல் கொலஸ்டிராலும் சேருவதை தடுப்பதால் உடல் எடை குறையும். உடல் பருமன் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்கும்போது உடலில் உள்ள அதிகப்படியான ரசாயனங்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றும். அதோடு உடல் சூட்டைத் தணிக்கும். குறிப்பாக, வெயில் காலத்தில் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இது உதவி செய்யும்.

மண் பானை

மண் பானையில் தண்ணீர் வைத்துக் குடிப்பதன் முக்கிய நோக்கமே அது அந்த தண்ணீரை நன்கு குளிர்ச்சியாக மாற்றும் என்பதற்கு தான். தண்ணீரின் சுவையும் கூடும். குறிப்பாக, வெயில் காலத்தில் மண் பாத்திரங்களில் தண்ணீர் வைத்துக் குடித்தால், உடல் வயிறு குளுகுளுவென்று இருக்கும். ஒட்டுமொத்த உடலும் குளிர்ச்சியடையும். உடலின் வெப்பநிலை குறையும். தண்ணீரை மண் பாத்திரங்களில் ஸ்டோர் செய்து வைத்துக் குடிப்பதன் மூலம் அசிடிட்டி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

குறிப்பாக உணவுகளில் உள்ள அமிலததன்மையைக் குறைத்து குடலின் அமிலத்தன்மையை சமநிலையில் வைத்திருக்கச் செய்யும். இதனால் உடலின் பிஎச் அளவு சமநிலையில் இருக்கும். களிமண் பானைகளில் தண்ணீர் வைத்து தினமும் குடித்து வரும்போது ஜீரண ஆற்றல் அதிகரிக்கும். குடல் ஆரோக்கியம் மேம்பட்டு ஜீரணம் சரியாக நடக்கும் போது இயற்கையாகவே உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கும். தற்போது, வெப்ப அலைகளின் காரணமாக சன் ஸ்டிரோக் ஏற்படும் ஆபத்து அதிகம். ஆனால், வெயில் காலத்தில் மண் பானையில் வைத்து தண்ணீர் குடிக்கும்போது சன் ஸ்டிரோக் வரும் ஆபத்து குறையும் என்று கூறப்படுகிறது.

Read More : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் சூப்பர் வேலை..!! ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement