கோபா அமெரிக்கா 2024: காலிறுதிக்குள் நுழைந்தது கொலம்பியா!. 3-0 என்ற கணக்கில் கோஸ்ட்டா ரிக்கா தோல்வி!
Copa America 2024: கோபா கால்பந்து தொடரில் 3-0 என்ற கோல் கணக்கில் கோஸ்ட்டா ரிக்காவை வீழ்த்தி கொலம்பியா காலிறுதிக்கு முன்னேறியது
அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. க்ளெண்டேலில் உள்ள ஸ்டேட் பார்ம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இதன் 'டி' பிரிவு லீக் போட்டியில் கொலம்பியா - கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. போட்டியின் துவக்கத்தில் இருந்த கொலம்பியா வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். லிவர்பூலின் லூயிஸ் டயஸின் அதிரடி ஆட்டத்தால் பொலிவியா 31வது நிமிடங்களில் 1-0 என முன்னிலை பெற்றது.
பின்னர், 59 வது நிமிடத்தில் டேவின்சன் சான்செஸ் ஒரு கார்னர் கிக்கை ஹெடர் மூலம் கோலடித்தார், இதன்மூலம் கொலம்பியா 2-0 ஆக முன்னிலை வகித்தது. ஜான் கோர்டோபாவின் தனி முயற்சியானது பக்க கோணத்தில் இருந்து வலது-கால் ஷாட் செய்ய வழிவகுத்தது. இதையடுத்து, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோபா அமெரிக்கா தொடரின் காலிறுதிக்கு கொலம்பியா தகுதி பெற்றது.
Readmore: Wow!. அந்த நீல வட்டம்!. வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் `மெட்டா ஏஐ’ இந்தியாவில் அறிமுகம்!. பயன்கள் இதோ!