For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Coolie | ரஜினி படம் என்றாலே தெறித்து ஓடும் பாலிவுட் நடிகர்கள்..!! அட இவரு கூட ஓடிட்டாராமே..!! கவலையில் லோகேஷ்..!!

11:21 AM May 21, 2024 IST | Chella
coolie   ரஜினி படம் என்றாலே தெறித்து ஓடும் பாலிவுட் நடிகர்கள்     அட இவரு கூட ஓடிட்டாராமே     கவலையில் லோகேஷ்
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் என்பதால், படம் குறித்த ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் கூலி படத்தின் டீசரை வெளியிட்ட வகையில், பழைய டைட்டில், ரஜினி பேசிய பழைய வசனம் எல்லாமே காப்பி என்பதால், கடுமையான விமர்சனத்தில் சிக்கினார் லோகேஷ். போதாக்குறைக்கு டீசரில் பயன்படுத்திய பிஜிஎம் என்னோட பாட்டு என இளையராஜா, படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்க்கு நோட்டீஸ் அனுப்பி மேலும் பரபரப்பை கிளப்பினார்.

Advertisement

இந்நிலையில், கூலி படத்தில் பல முக்கிய நட்சத்திரங்களை களத்தில் இறக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். அதன்படி மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன், ஜீவன், சத்யராஜ், நடிகை ஷோபனா போன்றவர்களின் பெயர்கள் முதலில் இருந்து அடிபட்டு வருகின்றன. ஆனால், இது எதுவுமே தற்போது வரை உறுதியாகவில்லை. கூலி படத்தில் மிக முக்கியமாக பாலிவுட் ஸ்டாரில் ஒருவரான ஷாருக்கானை நடிக்க வைக்க ஆரம்பத்தில் இருந்தே, லோகேஷ் முயற்சித்த நிலையில், அவர் சம்மதிக்கவில்லை. ஏற்கனவே கால்ஷீட் டைட்டாக இருப்பதால் நடிக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டாராம்.

பிறகு மற்றொரு முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்து வந்தது. ஆனால், ஒரு கட்டத்தின் ரன்வீர் சிங்கும் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார். ரஜினிகாந்த் படத்தில் நடிப்பது பாலிவுட் ஸ்டார்களுக்கு பெருமைதானே, ஏன் இப்படி நடிக்க மறுக்கிறார்கள் என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில், அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. அதாவது ரஜினி படத்தில் ரஜினிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், அந்த படத்தில் தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல காட்டப்பட்டு இருந்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர்கள் மோகன்லால், விநாயகர் போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட பாலிவுட் நடிகர்கள் ரஜினி படம் என்றாலே, தெறித்து ஓடுகின்றனர். ஒரு படத்தில் நடித்து ஒட்டுமொத்த இமேஜூம், டேமேஜ் ஆக வேண்டாம் என கூலி படத்தை தவிர்க்கின்றனர்.

Read More : Crime | ரவுடி மனைவியுடன் உல்லாசம்..!! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா..? இளைஞரை வெட்டி சாய்த்த கும்பல்..!!

Advertisement