For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Cooku with Comali Season 5..!! வெளியானது முதல் வீடியோ..!! நடுவரானார் மாதம்பட்டி ரங்கராஜன்..!!

06:51 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
cooku with comali season 5     வெளியானது முதல் வீடியோ     நடுவரானார் மாதம்பட்டி ரங்கராஜன்
Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது. அதனால் அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பலரையும் சிரிக்க வைக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒவ்வொரு வருடமும் தொடங்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில் கடந்த நான்கு சீசன்களாக இதையே பின்பற்றி வந்த இந்த நிகழ்ச்சி இந்த முறை பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்து சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும், ஐந்தாவது சீசனுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இது இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து தயாரிப்பாளர், இயக்குனர் என்று அடுத்தடுத்து விலகி இருந்தனர்.

அதே நேரத்தில் நான்கு சீசன்களாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட்டும் திடீரென்று தானும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறேன் என்று கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. இம்முறை வெங்கடேஷ் பட்டிற்கு பதிலாக, மாதம்பட்டி ரங்கராஜன் களமிறங்கியுள்ளார். அதோடு, தாமுவும் உள்ளார்.

சமீபத்தில் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகளில் மாதம் பட்டி ரங்கராஜனின் சமையல்தான் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. அதோடு சமூக வலைத்தளத்திலும் இவருக்கு அதிகமான இளைஞர்கள் பாலோவர்ஸ்களாக இருக்கின்றனர்.

Read More : முகேஷ் அம்பானி வீட்டில் வேலை செய்பவர்களுக்கு இத்தனை லட்சம் சம்பளமா..? வேலை ஆட்களே இத்தனை பேரா..?

Advertisement