For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிதாக களமிறங்கும் கோமாளிகள்.. யார் யார் தெரியுமா? வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்..!

06:50 AM Apr 25, 2024 IST | shyamala
குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிதாக களமிறங்கும் கோமாளிகள்   யார் யார் தெரியுமா  வெளியான போட்டியாளர்களின் லிஸ்ட்
Advertisement

ரியாலிட்டி ஷோக்களில் முன்னிலை வகிக்கும் தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான். பிக்பாஸ், சூப்பர் சிங்கர், பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக் என பல ரியாலிட்டி ஷோக்களை தன் வசம் வைத்துள்ளது. விஜய் டிவியின் இந்த ரியாலிட்டி ஷோக்களில் முன்னிலை வகிக்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சிக்கு உலகளவில் வரவேற்பு மிகுதியாய் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சின்னத்திரை வெள்ளித்திரை நட்சத்திரங்களின் கேரியர் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் பெரும் பங்குவகிக்கிறது, இந்த ரியாலிட்டி ஷோ.

Advertisement

சிறந்த ஸ்ட்ரெஸ் பர்ஸ்டராகவும், சமையல் டிப்ஸ், சமையல் வகைகள், அத்துடன் கோமாளிகள் செய்யும் சேட்டை, காமெடி என குக் வித் கோமாளியை பார்க்கும் மக்களை, தங்களையும் மறந்து சிரிக்க வைப்பதில் இந்த நிகழ்ச்சியை அடித்துக்கொள்ள முடியாது. இதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றி என்றே கூறலாம். 4 சீசன்களை தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக 5வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது குக் வித் கோமாளி.

இந்த சீசனில் மக்களின் எதிர்பார்ப்பை கிளறும் வகையில், செப் தாமுவுடன் மதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்குகிறார். இந்த நிலையில், குக் வித் கோமாளியின் 5வது சீசன் வரும் ஏப்ரல் 27ம் தேதி ஒளிபரப்பாகிறது. மேலும் இந்த சீசனில் புகழ், சுனிதா, குரேஷியுடன் சேர்ந்து கேமி, வினோத், அன்ஷிதா, ஷப்னம் என்கிற 5 புதிய கோமாளிகளை களமிறக்குகின்றனர், குக் வித் கோமாளி டீம். இதற்கான ப்ரோமோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், குக் வித் கோமாளியின் 5வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி வெளியிட்டுள்ள இந்த ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இந்த சீசனுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்துள்ளது குக் வித் கோமாளி குழு. புட் ரெவ்யூவர் இர்பான், வசந்த் வசி, தொகுப்பாளர் பிரியங்கா, நடிகர் விடிவி கணேஷ், சின்னத்திரை பிரபலம் சுஜிதா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஷாலின் சோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைசாமி, பூஜா, ஆகியோரை இந்த சீசனின் குக்குகளாக களமிறங்கியுள்ளனர்.

Indonesia | உதயமாகும் புதிய சகாப்தம்.!! இந்தோனேசியா அதிபராக அறிவிக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோ.!!

Tags :
Advertisement