சர்ச்சைக்குள்ளான பிரதமர் மோடி!. டி20 உலகக் கோப்பையை தொட்டுக்கூட பார்க்காதது ஏன்?
T20 World Cup: டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்த வீரர்கள் அவரிடம் உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றுக் கொண்டனர். அப்போது கோப்பையை தொட்டுக்கூட பார்க்காத பிரதமரின் செயல் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்றது. 20 அணிகள் மோதிய இந்த தொடரில் இந்திய அணி கடந்த 29ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை கைப்பற்றியது. 11 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா கைப்பற்றக்கூடிய ஐசிசி கோப்பை இதுவாகும். இதேபோன்று 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர், சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்தியா டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் நேற்று தாயகம் திரும்பினர்.
டெல்லி விமான நிலையத்தில் இந்திய அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோப்பையுடன் ரோகித் சர்மா வெளியே வந்து, அந்த கோப்பையை ரசிகர்களுக்கு காட்டி மகிழ்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உலகக்கோப்பையை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடி டி20 உலகக் கோப்பை கோப்பையுடன் இந்திய அணி புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தபோது, நம்பமுடியாத காட்சி ஒன்று வெளிப்பட்டது. மோடி டி20 உலகக் கோப்பை கோப்பையை தனது கையால் தொடவில்லை. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் கைகளை மட்டுமே அவர் பிடித்து இருந்தார்.
டிராவிட் மற்றும் ரோகித் ஆகியோர் மட்டும் தங்கள் கைகளில் கோப்பையை பிடிக்க, பிரதமர் மோடி அவர்களின் கைகளைப் பிடித்தவாறு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். பிரதமர் மோடியின் இந்த அசாத்திய செயல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிரதமர் மோடிக்கு இந்திய அணியின் ஜெர்ஸியை பரிசாக வழங்கியது. NAMO என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஜெர்ஸியில் பிரதமர் மோடிக்கு 1 ஆம் எண் வழங்கப்பட்டுள்ளது.