For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் மகன்..!! இன்னும் 18 வயதே ஆகல..!! அதுக்குள்ள இப்படியா..?

02:42 PM Nov 16, 2023 IST | 1newsnationuser6
சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷின் மகன்     இன்னும் 18 வயதே ஆகல     அதுக்குள்ள இப்படியா
Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் ஒருபக்கம் பிஸியாக இருக்க, ஐஸ்வர்யா இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷின் மகன் பைக் ஓட்டக் கற்றுக் கொள்ளும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க பல முயற்சிகள் ரஜினி தரப்பில் எடுக்கப்பட்டாலும், அது பலனளிக்கவில்லை.

இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் இருவரும் தங்களது பிள்ளைகளை நன்றாகவே கவனித்து வருகின்றனர். யாத்ரா, லிங்கா பள்ளிப்படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது, இருவரும் பிள்ளைகளுடன் தனியாக நேரம் செலவிடுவது என இருக்கின்றனர். இந்நிலையில், இன்னும் 18 வயது நிரம்பாத தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டும் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

போயஸ் கார்டனில் யாத்ரா விலையுயர்ந்த R15 பைக்கை ஓட்டி பழகியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ‘18 வயதே ஆகவில்லை. அதற்குள் அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால் யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சக வாகன ஓட்டிகளுக்கும் அது சிக்கல்’ என விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் ஒருசிலரோ, ‘மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார். கற்றுக்கொள்வது ஒரு தவறா?’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags :
Advertisement