For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை...! கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கம்...!

08:45 AM Jan 24, 2024 IST | 1newsnationuser2
அடுத்த 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை     கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Advertisement

ஜனவரி 25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

Advertisement

இது குறித்து விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; ஜனவரி 25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன் படி, 24, 25-ம் தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பிற முக்கிய இடங்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

Tags :
Advertisement