For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர் கனமழை..!! காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு..!! தக்காளி எவ்வளவு தெரியுமா..?

As the supply of vegetables has reduced due to continuous heavy rains, the price of tomatoes has risen dramatically.
10:44 AM Jul 16, 2024 IST | Chella
தொடர் கனமழை     காய்கறிகளின் விலை அதிரடி உயர்வு     தக்காளி எவ்வளவு தெரியுமா
Advertisement

தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ள நிலையில், தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

Advertisement

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளிலும், பல்வேறு விளை நிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விளைப்பொருள்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால், விற்பனை விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்ததால், காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட 35 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு இன்று விற்பனையாகிறது. வரத்து குறைவின் காரணமாக தக்காளி விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படலாம் என வியாபாரிகள் கூறுகின்றனர். அதே போல ஒரு கிலோ பச்சை மிளகாய் 90 ரூபாய்க்கும் ஒரு கிலோ கேரட் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : கணவரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரீல்ஸ் போட்ட மனைவி..!! தலையில் ஒரே போடு..!! சாக்கு மூட்டையில் மதுமிதாவின் உடல்..!!

Tags :
Advertisement