முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர் கனமழை..!! நிரம்பியது பில்லூர் அணை..!! பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!! வெளியான முக்கிய எச்சரிக்கை..!!

Due to continuous heavy rains, the water level of Pillur Dam is increasing. As the water level of the dam crossed 97 feet, water was released from the dam through 4 sluices into the Bhavani river this morning (July 16).
01:18 PM Jul 16, 2024 IST | Chella
Advertisement

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்ததால், இன்று (ஜூலை 16) காலையில் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் வனப்பகுதியில் பில்லூர் அணை அமைந்துள்ளது. கோவையின் முக்கிய நீராதாரமாக உள்ள இந்த அணையை மையப்படுத்தி பில்லூர் 1 மற்றும் 2-வது கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பவானி ஆற்றை மையப்படுத்தி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மற்றும் கேரளா மலைக்காடுகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். 97 அடியை கடந்தால் அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக, பவானி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும். அதன்படி, கனமழையால் இன்று பில்லூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அணையின் நீர்மட்டம் 97 அடியை கடந்தவுடன், அணையில் இருந்து 4 மதகுகள் வழியாக தண்ணீர் பவானியாற்றில் இன்று காலை திறந்து விடப்பட்டது.

முதலில் விநாடிக்கு 22 ஆயிரம் கன அடி உபரி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டது. சில மணி நேரத்தில், இது 14 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால், பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான சிறுமுகை, மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Read More : BREAKING | ரூ.100 கோடி மோசடி..!! அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!!

Tags :
Heavy rainTamilnaduபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
Advertisement
Next Article