மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு…! எந்தெந்த மாவட்டங்கள்…! முழு விவரம்..!
கனமழை காரணமாக நாகை, காரைக்கால், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியாக இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். கனமழை காரணமாக நாகை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்நிலையில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்திருக்கிறார் ஆட்சியர் இளம்பகவத்.
அதேபோல், தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை பதிவாகியிருக்கும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இதனால், தஞ்சையில் விடுமுறை குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.