For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

4 நாட்களாக தொடர் கனமழை!. 170-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை!. நேபாள பெருவெள்ளத்தின் சோகம்!

Flood and landslides claim 170 lives in Nepal
06:57 AM Sep 30, 2024 IST | Kokila
4 நாட்களாக தொடர் கனமழை   170 ஐ தாண்டிய பலி எண்ணிக்கை   நேபாள பெருவெள்ளத்தின் சோகம்
Advertisement

Nepal floods: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியுள்ளது.

Advertisement

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது.

நேபாள் தலைநகர் காத்மாண்டுவிலும் கொட்டி தீர்த்த கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை பலியானோர் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளது. இன்னும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 4 ஆயிரம் பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. கவ்ரெபலன்சவுக் மாவட்டம் தான் மிக அதிமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Readmore: இடைவிடாத இஸ்ரேல் தாக்குதல்!. லெபனானில் 105 பேர் கொல்லப்பட்டனர்!. அமைச்சகம் தகவல்!

Tags :
Advertisement