For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்!! கொடூரமாக தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்!

11:14 AM Apr 09, 2024 IST | Mari Thangam
தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்   கொடூரமாக தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள்
Advertisement

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் இருவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியதில் பலத்த காயமடைந்த மீனவர்கள் சிகிச்சையில் உள்ளனர். 

Advertisement

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை நமது நாட்டில் கடற்படையும் கடலோர காவல்படையும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மெக்கான்ஸ், தங்கம் என்ற இரு மீனவர்கள் விசைப்படகு மூலம் மீன் பிடிக்கக் கடலுக்குள் சென்றனர். அவர்களை நடுக்கடலில் மடக்கிய இலங்கைக் கடற்படையினர் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பி, ராமேஸ்வரம் வந்த மீனவர்கள் அரசு மருத்துவமனையை நாடினர். அங்கு அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், இருவரும் வீடுகளின் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக் கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்களிடம், சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இலங்கை கடற்படையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
Advertisement