முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடரும் விடுமுறை..!! ஆண்டு இறுதித் தேர்வுக்கு தயாராக முடியாமல் தவிக்கும் மாணவர்கள்..!!

04:52 PM Apr 12, 2024 IST | Chella
Advertisement

அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டத்தின் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடருமா? ஆண்டு இறுதித் தேர்வானது நடைபெறுமா? என்னும் குழப்பத்திலும், அச்சத்திலும் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement

மயிலாடுதுறையில் சில நாட்களுக்கு முன் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இச்சிறுத்தை நேற்று (ஏப்ரல் 11) அரியலூர் மாவட்ட பொன்பரப்பி, சிதலவாடி பகுதிகளில் நுழைந்து சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயத்துடன் உள்ளனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் அனி மேரி ஸ்வர்ணா புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரியலூர் மாவட்ட பள்ளிகள் அனைத்திற்கும் இன்று (ஏப்ரல் 12) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள் அனைவரும் திரும்பி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். மேலும், பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் புகுந்த சிறுத்தையை பிடிக்க 22 இடங்களில் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

சிறுத்தையின் நடமாட்டத்தால் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட விடுமுறையானது நாளை மற்றும் நாளை மறுநாள் வார இறுதி நாட்கள் என்பதால், தொடரப்படவுள்ளது. இவ்வாறு தொடர் விடுமுறை வழங்கப்பட்டால் ஆண்டு இறுதித் தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்னும் குழப்பத்திலும், அச்சத்திலும் மாணவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அடுத்தடுத்து வந்த ஃபோன் கால்..!! ஆடையை கழற்றி நிர்வாணமாக நின்ற பெண் வழக்கறிஞர்..!! நடந்தது என்ன..?

Advertisement
Next Article