தொடரும் கனமழை..!! உச்சத்திற்கு சென்ற காய்கறிகளின் விலை..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பர் 5ஆம் தேதி வரையிலும் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்தடுத்த நாட்களில் காய்கறிகளின் விலை இன்னும் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் இன்று ஒவ்வொரு காய்கறிகளும் என்னென்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த பட்டியலை பார்க்கலாம்.
நெல்லிக்கனி 102 ரூபாய்க்கும், அவரைக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், பாகற்காய் 40 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும், கொத்தவரை 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 10 ரூபாய்க்கும், குடைமிளகாய் 25 ரூபாய்க்கும், கேரட் 25 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், தேங்காய் 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பூண்டு 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கும், முருங்கை 90 ரூபாய்க்கும், இஞ்சி 240 ரூபாய்க்கும், கோவக்காய் 20 ரூபாய்க்கும், மாங்காய் 80 ரூபாய்க்கும், மரவள்ளிக்கிழங்கு 50 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், தக்காளி 40 ரூபாய்க்கும், முள்ளங்கி 20 ரூபாய்க்கும், புடலங்காய் 40 ரூபாய்க்கும், வாழைப்பூ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.