தொடரும் கனமழை..!! இந்த மாவட்ட பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை..?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர் கனமழையால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நீலகிரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நனைந்தவாறு சென்றனர். இதனால் பல பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.