முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தொடர் தோல்வி..!! மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த பாமக..!! பாஜகவுடன் கூட்டணி தொடருமா..?

It has been reported that the party has lost its state status due to the continuous defeat of the party.
07:42 AM Jun 06, 2024 IST | Chella
Advertisement

பாமக-வின் தொடர் தோல்வி காரணமாக அக்கட்சி மாநில அந்தஸ்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்று மக்களவை தேர்தலை சந்தித்தது. அக்கட்சியின் சார்பில் 10 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இதில், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா, தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் ஒட்டுமொத்தமாக அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தது மட்டுமின்றி, 10 தொகுதிகளிலும் 18.79 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்றனர். குறிப்பாக, 6 தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காமல் போனது. இதன் காரணமாக பாமக மீண்டும் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.

குறிப்பாக, இந்த மக்களவை தேர்தலில் 4.23% வாக்கு மட்டுமே பெற்றுள்ளதால் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாவட்டத்தை குறித்து வைத்து கடந்த 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாமக இதுவரை 7 நாடாளுமன்ற தேர்தல்களை சந்தித்துள்ளது. 2004ஆம் ஆண்டு நடந்த 14-வது மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது.

இதன் காரணமாக அப்போது அக்கட்சியின் வாக்கு சதவீதம் 6.71 ஆக இருந்தது. அதன் பின்னர் நடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் தொடர் தோல்வியை மட்டுமே பாமக சந்தித்து வருகிறது. இதேபோல், இம்முறை நடந்த தேர்தலிலும் 8 சதவீத வாக்குகளை எட்ட முடியாமலும், தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : உங்கள் வீட்டு நாய்களிடமும் உஷாரா இருங்க..!! 6 வார பச்சிளம் குழந்தையை கடித்து குதறிய ஹஸ்கி நாய்..!!

Tags :
anbumanielectionpmkTamilnadu
Advertisement
Next Article