பன்னூனைக் கொல்ல சதி!. குற்றம்சாட்டப்பட்ட இந்திய வம்சாவளி அமெரிக்காவிடம் ஒப்படைப்பு!
Nikhil Gupta: சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படும் சதித்திட்டத்தில் சிக்கிய இந்திய வம்சாவளியை சேர்ந்த நிகில் குப்தா, செக் குடியரசில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்க அரசின் வேண்டுகோளின் பேரில் குப்தா கடந்த ஆண்டு ஜூன் மாதம் செக் குடியரசில் கைது செய்யப்பட்டார். அவர் இன்று நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 52 வயதான குப்தா, புரூக்ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்தில், பெடரல் நிர்வாகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், பன்னூனைக் கொல்ல குப்தா ஒரு ஹிட்மேனை நியமித்ததாகவும், அதற்கு முன்பணமாக 15,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாகவும் பெடரல் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதில் இந்திய அரசு அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் இந்தியாவுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ள இந்தியா, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் குப்தா தனது வழக்கறிஞர் மூலம் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். குப்தாவின் வழக்கறிஞர் ரோகினி மூசா, அமெரிக்க ஏஜென்சிகளின் தேவையற்ற செல்வாக்கின் கீழ் செக் அரசு நியமித்த வழக்கறிஞரிடமிருந்து குப்தாவுக்கு பாதகமான சட்ட ஆலோசனைகள் கிடைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
Readmore: எச்சரிக்கை!. பாலியல் ரீதியாக பரவும் பூஞ்சை!. அமெரிக்காவில் முதல் வழக்கு பதிவு!. அறிகுறிகள் இதோ!