முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ADMK | புதுச்சேரி அதிமுக வேட்பாளரை தோற்கடிக்க சதி.! மாநிலத் தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!

08:35 PM Apr 14, 2024 IST | Mohisha
Advertisement

ADMK: 2024 ஆம் வருட பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இந்த பொது தேர்தலில் வாக்குப்பதிவு தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட 102 தொகுதிகளில் வருகின்ற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement

தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் திமுக அதிமுக(ADMK) பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கட்சி தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அந்தக் கட்சியுடன் தேமுதிக புதிய தமிழகம் எஸ்டிபிஐ ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

இந்நிலையில் பாண்டிச்சேரியில் அதிமுக கட்சியின் தலைவர் அந்தக் கட்சியின் வேட்பாளரை தோற்க வைக்க சதி செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதிமுக கட்சியின் பாண்டிச்சேரி மாநில தலைவராக இருக்கும் அன்பழகன் அந்தக் கட்சியின் தமிழ் வேந்தனை தோற்கடிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

அன்பழகன் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிமுக வேட்பாளர் தமிழ் வேந்தனுக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபடுவதாகவும் வையாபுரி குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் அன்பழகனின் செயலால் புதுச்சேரி மாநிலத்தில் அதிமுகவின் அங்கீகாரம் இரத்தாகும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுகவினர் இடையே இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: ISRAEL- IRAN WAR | கச்சா எண்ணெய், இந்திய ரூபாயில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்.?

Tags :
ADMKanbalaganepspudhucherry
Advertisement
Next Article