முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ELECTION 2024 | திமுக - காங் தொகுதி உடன்பாடு.! 10 தொகுதிகளில் களமிறங்கும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

07:44 PM Mar 09, 2024 IST | Mohisha
Advertisement

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் விசிக மதிமுக மனிதநேய மக்கள் கட்சி கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியில் போட்டியிட இருக்கிறது.

Advertisement

இதில் பெரும்பாலான கட்சிகளுடன் திமுகவிற்கு தொகுதி பங்கீடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மற்றும் திமுக தேர்தல் குழு தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

இதற்காக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் திமுக தேர்தல் குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்து வருகின்றனர். இரண்டு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி உறுதியான நிலையில் விரைவிலேயே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திமுக தலைமையுடன் காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்துள்ளது.

இந்த தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் கட்சி 14 தொகுதிகள் கேட்ட நிலையில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் வழங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

Advertisement
Next Article