Congress | பிரச்சாரத்தில் பெரிய தலைகள் ஆப்சென்ட்.!! காங்கிரஸ் கட்சியினர் குமுறல்.!!
Congress: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது
தேர்தல் பரப்புரைக்கு இன்னும் ஒரு நாளே மீதம் இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் விசிக மதிமுக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் போட்டியிடுகின்றன. நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதிகளில் காங்கிரஸ்(Congress) வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தீவிரமான களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்காதது அந்தக் கட்சியின் நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியையும் மனக்குமுறலையும் ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தங்கபாலு திருநாவுக்கரசு பாச்சிதம்பரம் இ வி கே எஸ் இளங்கோவன் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆப்சென்டாகி இருப்பது காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பதவி என்றால் ஓடி வருவார்கள் தேர்தல் பணி என்றால் பதுங்கி கொள்வார்கள் என காங்கிரஸ் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.